பழைய வாகனங்களுக்கு பசுமை வரி?நிதின் கட்கரி ஒப்புதல்!
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுபற்றி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது:
“சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். இது முறைப்படி அறிவிக்கையாக வெளியாவதற்கு முன்பு மாநிலங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
8 ஆண்டுகளுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும்.
சாலை வரியில் 10 முதல் 25 சதவிகிதம் வரையிலான விகிதத்தில் வரி விதிக்கப்படும்.”
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்