அதிமுக அமைச்சர் அதிரடி சவால்?
அதிமுக அமைச்சர் அதிரடி சவால்?
சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி
கே.பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 19ம் தேதி தனது தொடங்கியுள்ளார்
அதேபோல், திமுகவும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல் ஆளாக ஸ்டாலின் மகன் உதயநிதி-யை களமிறக்கியது. உதயநிதி செல்லும் சில இடங்களில் வரவேற்பு கிடைத்தாலும், பல இடங்களில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம்: அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திமுகவின் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என்று சவால் விடுத்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, “திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுகவினர் ஆட்சியில் இல்லாத போதே வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் முதற்கொண்டு பணம் வசூலித்து வருகின்றனர்.
ஆனால், இதனை அதிமுகவினர் செய்வதாக ஸ்டாலின் கூறி வருகிறார். இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்தால், நான் அமைச்சர் பதவியையும், கட்சியின் பதவியையும் ராஜினாமா செய்து விடுகிறேன்.” என்று திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்