மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார் ராகுல் காந்தி!

தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மக்களோடு மக்களாக நெருங்கி பரப்புரை செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். நேற்று கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பரப்புரை வாகனத்தில் அமர்ந்தபடி ஸ்டைலாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

கோவையை தொடர்ந்து திருப்பூருக்கு சென்ற அவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் சக நிர்வாகிகளுடன் அமர்ந்து தேநீர் குடித்தார். மேலும் படுகர் இன மக்களுடன் இணைந்து அவர் நடனமும் ஆடினார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஈரோட்டில் அவர் பரப்புரையை தொடங்கினார்.

இதையடுத்து ராகுல்காந்தி, ஈரோடு அருகே உள்ள ஓடாநிலை பகுதியில் நெசவாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

எல்லா தலைவர்களையும் போல் இல்லாமல் ராகுல் காந்தி இயல்பாக பரப்புரை மேற்கொண்டதால் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.