நான்கு மற்றும் பத்தாமிடம்
நான்கு மற்றும் பத்தாமிடம்
நான்காம் இடம் முக்கியமாக
சுகஸ்தானமாகும்.
மேலும் கல்வி, வீடு, சொத்து
அமைவதை குறிக்கும்.
பத்தாம் இடம்
முக்கியமாக உத்யோகம், தொழில், வியாபார ஸ்தானமாகும். இந்த இரண்டு வீடுகளும் சம சப்தம ராசிகளாகும். நான்காம் வீட்டில் உள்ள கிரகம் பத்தாம் வீட்டை பார்க்கும். பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் நான்காம் வீட்டை பார்க்கும். நான்காம் அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தாலும், பத்தாம் அதிபதி நான்காம் வீட்டில் இருந்தாலும் யாவரும் தன்னை வந்து வணங்கும் மேன்மை பெற்றவராய் இருப்பார்.
இது ஒரு வகையில் சொத்து யோகமாகும். புதையல் யோகம் என்றும் சொல்வார்கள். எந்த வகையிலாவது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். உழைப்பில்லாத செல்வம் சேரும். உயர் சொத்து சேரும் பாக்கியம் பெற்றவர்கள். கல்வி மூலம் உயர்ந்த ஸ்தானத்திற்கு செல்வார்கள். ரியல் எஸ்டேட், பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்கும் தொழிலில் கொடி கட்டிப் பறப்பார்கள். அரசியலில் இருப்பவர்களுக்குப் பட்டம், பதவி, அமைச்சராகும் யோகம் உண்டு.
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்