தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து

பிரேமலதா பேட்டி_ கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும். காலதாமதம் செய்ய கூடாது என்று தேமுதிக. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்

:

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது,

கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும். காலதாமதம் செய்ய கூடாது. சசிகலா விவகாரத்தில் அதிமுக விரைவாக நல்ல நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. 

சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் சசிகலாதான். 

தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை எனக் கூறுவது தாமதத்திற்கு வழிவகுத்துவிடும் என கூறினார்.

செய்தியாளர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.