எல்லையில் சீனப் படைகள் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம்?
புதுடெல்லி:
விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஜனவரி இறுதிக்குள் மேலும் 3 விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமான படையில் ரபேல் விமானங்களை சேர்க்கும் பணி வரும் 2023-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றார். கிழக்கு லடாக்கில் சீனப்படைகள் அத்துமீறக் கூடிய வாய்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் நாமும் பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்