தேர்தல் களப் பணிகள் குறித்து சீமான் ஆலோசனை?
சட்டமன்ற பொது தேர்தல் களப்பணிகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை, நெல்லை, மதுரை மண்டல பொறுப்பாளர்களுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
முதலாவதாக தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் 22-01-2021 அன்று மாலை 4 மணியளவில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்