கோபாலபுரத்தில் ஸ்டாலின் வெளியிடப் போகும் அறிவிப்பு?

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி
கே பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 19ம் தேதி தனது தொடங்கியுள்ளார் திமுகவும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல் ஆளாக ஸ்டாலின் மகன் உதயநிதி-யை களமிறக்கியது. உதயநிதி செல்லும் சில இடங்களில் வரவேற்பு கிடைத்தாலும், பல இடங்களில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதே சமயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், திமுகவின் தேர்தல் பிரச்சார உத்தியாக தி.மு.க. தயார்
செய்துள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதனை வரும் 25-ந்தேதி கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் முறைப்படி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும், முதல் கூட்டம் 29 ந்-தேதி திருவண்ணாமலையில் நடக்க உள்ளதாகவும், காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையும் இந்த கூட்டம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டங்களில் மக்கள் கொடுக்கும் புகார் மனுக்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், திமுகவின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.