காலிறுதிக்கு முன்னேறிய சிந்து & சமீர் வர்மா?
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் இந்தியாவின் சிந்து மற்றும் சமீர் வர்மா.
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பேட்மின்டன் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில், மலேசியாவின் கிசோனா செல்வதுரையை வென்ற சிந்து, காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டியை இவர் 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.
அதேசமயம், ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை, 21-12, 21-9 என்ற நேர்செட் கணக்கில் வென்ற இந்தியாவின் சமீர் வர்மா, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆனால், இந்தியாவின் மற்றொரு நட்சத்திரமான பிரனாய், மலேசிய வீரர் டேரன் லீவ்வுடன், இரண்டாவது சுற்றில் தோற்று வெளியேறினார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்