பாவேந்தரும் தமிழும் – தொடர் – 15

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
இயற்கையோடு
மனிதன்இணைந்து
வாழ்ந்தவரை
இன்பமாகஇருந்தான்.
என்றைக்கு
இயற்கையைவிட்டு
விலகிநிற்கத்
தொடங்கினானோ
அன்றிலிருந்து
சிக்கலுக்குள்
சிக்கித்தவிக்கிறான்..
உண்மையில்
இயற்கைநம்தாய் ! இயற்கைநம்தந்தை
இயற்கைநம்காதலி
இயற்கைநம்காதலன்!
எந்தஇயற்கைமடியில் வளர்ந்தானோஅந்த
மடியைக்காயப்
படுத்துகிறான்..எந்தத்
இயற்கைத்தாயின்
மார்பில்பால்
குடித்தானோஅந்த
மார்பையேஅறுத்து
எறிகிறான் ..
வாழ்க்கைக்கு
இருளும்ஒளியும்
தேவைப்படுகிறது‌.
இரவும்பகலும்
மாறிமாறிவேண்டும்..
?
(அசைவைச்செய்தாய்
ஆங்கே_ஒலியாம்
அலையைச்செய்தாய்!
நீயே!நசையால்காணும்
வண்ணம்நிலமே !நான்காய்விரியச்
செய்தாய்!பசையாம்
பொருள்கள்செய்தாய்!
இயலாம்..பைந்தமிழ்
பேசச்செய்தாய் !
இசையாம்தமிழைத்
தந்தாய் ! பறவைஏந்திழை
இனிமைக்குரலால்)
என்கிறார்பாவேந்தர்..
( இயற்கைசெல்வம்
தலைப்பில்பக்கம்180)
?
ஓர்எழுத்தாளன்
தெளிவுபெறுவது
எப்போது?பட்டுப்பட்டுத்
தெளிந்தபட்டறிவால்
தன்னைநிலை
நிறுத்திக்கொள்கிறான்
அனுபவம்மூன்றுவகை
செவிவழிவருவது !
கண்வழிஅறிவது ! மெய்வழிஉணர்வது
அனைத்துகுறுங்
காவியத்திலும்
அனுபவங்களை
மட்டுமேபடைத்தார்!
கலைகளின் சுவைக்கு
சிறிதுகற்பனையும்
சேர்த்தார்.உணவில்
சிறிதுஉப்புப்போன்று..
?வாழ்வின்வலிமையை
உணர்த்தசொல்
ஓவியங்களைவடித்தார்.
இந்தச்சொல்லோவியம்
இலக்கியமாக
வளர்ந்தது.மக்கள்
மனதில்நிழலாய்
மலர்ந்தது.கருத்துப்
பெட்டகமாய்ஒளிர்ந்தது
இலக்கியம்காலத்தைவென்றது.
படைப்புகள்தமிழர்
வாழ்வில்மாறுதல்
செய்தது..இருளான
வாழ்க்கையில்
நம்பிக்கைச்சுடர்களை
ஏற்றுவதுதான்நல்ல
கவிதைகள்என்றார்
பாவேந்தர்பாரதிதாசன்.
சமூகம்பயனுற
காட்டாற்றுவெள்ளமாய்
காட்டுமிராண்டிகளாய்
இருந்தமானுடக்
குழுக்களை
படிப்படியான
பண்பாட்டுவளர்ச்சியால்
பக்குவநிலைக்கு
மாற்றியதுகவித்துவமே!
கவித்துவமே!என்றால்
மிகையாகாது !
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.