சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று பவ்ரிங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.

சிடி ஸ்கேன் உள்பட சில வசதிகள் இல்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6.30 மணி அளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ‘‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது. நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.