எடப்பாடி பழனிசாமியுடன் மீன்வளத்துறை மந்திரி திடீர் சந்திப்பு

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

செய்தியாளர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.