கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ இரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் இருநாட்டு மீனவர்களும் மிகுந்த ஏமாற்றம்
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிப்ரவரி 26, 27 ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறும் எனவும், அதில் 150 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருவிழா முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.