அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும்.முக ஸ்டாலின் பேச்சு.
முக ஸ்டாலின் பேச்சு. அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல்:
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் இன்று நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து வக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேனில் இருந்தபடியே ஸ்டாலின்பேசியதாவது, உங்களது அன்பான வரவேற்புக்கு நன்றி. உங்களிடம் இருக்கும் உற்சாகத்தை பார்க்கும்போது விரைவில் தி.மு.க ஆட்சி மலர்வது உறுதி என்பது கண்கூடாக தெரிகிறது. இன்னும் 4 மாதத்தில் உங்களது எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறபோகிறது.
மோடியின் கைப்பாவையாக திகழும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை தூக்கிஎறியும் காலம் நெருங்கிவிட்டது. எதற்கெடுத்தாலும் கலெக்சன், கமிசன், என்று இருக்கும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக இந்த தேர்தல் இருக்கும். தமிழகம் இந்திய அளவில் தலைநிமிர்ந்திட நல்லாட்சி அமைக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா.
தி.மு.க ஆட்சி வருவதை உங்கள் ஆர்வம் உறுதி செய்கிறது என்று பேசினார். பல்வேறு இடங்களில் தொண்டர்கள் அளித்த வரவேற்புக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து சென்றார்.
செய்தியாளர் ரஹ்மான்