நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 10
நம்ம நாட்டு மருந்து…! (10)
நமது நாக்கின் அருமைகளை பற்றி கூற வேண்டும் என்றால் ஆயிரம் விஷயங்களை கூறலாம்.
நாம் உடல் நிலை சரியில்லை என்று டாக்டரிடம் சென்ற உடன் அவர் முதலில் சொல்வது எங்கே நாக்கை நீட்டு பார்க்கலாம் என்பார்.
ஆம்….! நமது நாக்கை பார்த்தவுடனே நமக்கு என்ன விதமான நோய் வந்துள்ளது என்பதை, மருத்துவ அறிவியல் நாக்கின் நிறத்தை வைத்தே நோய்களை பற்றிய குறிப்புகளை தெளிவாக பதிவு செய்து உள்ளது.
மேலும் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமது நாக்கை பற்றி குறிப்பிடும் போது..
“யாகவராயினும் நாகாக்க காவாக்கால்-
சோகப்பர் சொல்லிழுக்கப்பட்டு..!”இந்த குறளின் பொருள் என்னவென்றால்…..!
யாராக இருந்தாலும் நாக்கை கட்டுப்படுத்தி காக்க வேண்டு்ம் நமது நாக்கை காக்கத் தவறிவட்டால் பேசிய வார்த்தைகளால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
இது நாம் பேசும் வார்த்தைகளை வைத்து தெய்வப்புலவர் நமக்கு கூறியது.
சமயம் சித்த மருத்துவ குறிப்பு நாக்கை பற்றி குறிப்பிடும் போது.. நாக்கு என்ன சொல்கிறதோ அதை நாம் பணிவுடன் கேட்டு உணர வேண்டும் இல்லையென்றால் நொந்து நோய்வாய்ப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாக வேண்டும் என்று கூறுகிறது.
ஒவ்வொருவருக்கும் அவரவர் நாக்குதான் சிறந்த மருத்துவர், ஆசிரியர், உடல் ஆரோக்கியத்தின் வழிகாட்டி என்பதை உணர வேண்டும் அதாவது நாக்கு உணர்த்தும் கருத்துக்களை மதிக்க வேண்டும்.
உதாரணமாக உணவு பொருட்களில் உப்பு அதிகமாக இருந்தால் நாக்கு துப்பி விடுகிறது.
காரம் அதிகமாக இருந்தாலும், கசப்பு அதிகமாக இருந்தாலும், புளிப்பு அதிகமாக இருந்தாலும், ஏன் இனிப்பு அதிகமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நாக்கு மறுத்து உணவுப் பொருட்களை திருப்பி வெளியே அனுப்பி விடுகிறது.
அதையும் மீறி நாம் உணவுப் பொருட்களை உள்ளே தள்ளி விடும்போது.
வயிற்றில் பிரச்சனை ஆரம்பம் ஆகிவிடுகிறது.
எனவே நாக்கை மதித்து உணவை உட்கொள்ள வேண்டும் என்பதுதான் உணவியலின் அடிப்படை தத்துவமாகும்.
சென்ற பதிவில் ஆங்கில மருத்துவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய தேதியில் என்ன நோய் நமக்கு ஏற்படும் என்பதை கணித்து அதற்கான மருந்து மாத்திரைகளை….!
மருத்துவ சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.. அல்லவா..?
அது எனது அனுபவப் பதிவு.
அதை இந்த பதிவில் உங்களுக்கு கண்டிப்பாக நான் பதிவு செய்துதான் ஆகவேண்டும்.
நான் நாளிதழில் நிருபராக அதாவது செய்தியாளராக பணியாற்றியவன்.
எங்களது நாளிதழ் பரபரப்பான காலை மற்றும் மாலை தமிழ் நாளிதழாக வெளிவந்து கொண்டிருந்தது.
என் நினைவு சரியாக இருந்தால் கடந்த 1994 அல்லது 95-ம் ஆண்டாக அது இருக்கும்.
அப்போது உலக மருத்துவர்கள் ஒன்று கூடி ஒரு பிரபலமான மருத்துவமனையில் ஒரு கலந்துரையாடல் நடத்தினார்கள்.
அதில் எதிர்வரும் காலத்தில் வரக்கூடிய நோய்களுக்கு என்னென்ன மாதிரியான உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
அதை எதிர்கொள்ளும் விதமான எப்படிப்பட்ட பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது எந்தெந்த நாடுகளில் தற்போது ஆய்வில் உள்ளது என்று விவாதித்தனர்.
இது எனக்கு சற்று ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.
காரணம்…!
ஒரு மனிதனுக்கு நோய் வராமல் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அடிப்படையான மருத்துவ கொள்கை, ஆனால் இவர்களோ ஏதோ ஒரு பொருளை உற்பத்தி செய்து அதை சந்தைப்படுத்தும் வியாபார நோக்குடன் தங்களது பகுப்பு ஆய்வுகளை நடத்துவதாக என் உள்ளுணர்வு கூறியது.
உலக மருத்துவர்களில் கலந்துரையாடலை இனி விரிவாகப் பார்ப்போம்…!
எனவே நண்பர்களே நோய் முதல் எதையும் வருமுன் காப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் நீங்கள்.
நல்ல (உணவு)மருந்து…!
நம்ம நாட்டு (உணவு)மருந்து…!
தொகுப்பு:-சங்கரமூர்த்தி… 7373141119