உலகப் பாவை – தொடர் – 19

உலகப் பாவை

      19. உள்ளம் விழித்திடுக

உள்ளங்கள் உறங்கு மானால் உண்மையெலாம் ஊமை ஆகும் உள்ளங்கள் சினக்கு மானால் உறவெல்லாம் பிணக்கால் மாளும் ;

உள்ளங்கள் வெடிக்கும் மானால் ஒருமையொரு பிடிப்பற் றோடும் கள்ளங்கள் கயமை  யாவும் கட்டற்றிங் குரிமை தேடும்;

உள்ளத்தில் விழிப்பு வந்தால் உலகத்தில் அழிவு நீங்கும்; உள்ளத்தில் அமைதி பூத்தால் உலகத்தில் ஒருமை தேங்கும்

உள்ளத்தின் வழிதான் நல்ல உலகத்தின் இயக்கம் என்ற உள்ளுறையை உலகோர்க் கோதி

உலாவருவாய் உலக பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.