விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் சென்ற கார்?

தாய்லாந்து நாட்டில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஓடுபாதையில் நபர் ஒருவர் கார் ஓட்டிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தாய்லாந்து நாட்டின் தலைநகரான Bangkok கில் உள்ள Suvarnabhumi விமநிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானநிலையத்தில் உள்ள விமான ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மர்மநபர் ஒருவர் தனது காரை விமான ஓடுபாதையில், விமானத்திற்கு அருகில் ஓடினசென்றுள்ளார்.

இதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த காரை மடக்கிப்பிடித்து, அந்த காரில் இருந்த Prathipat Masakul என்ற நபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நார் தவறுதலாக விமான ஓடுபாதையில் காரை ஓட்டிச்சென்றதாக கூறியுள்ளார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.