கால்நடைகளுக்கு உணவு அளித்தார் முதல்வர்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு/எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சென்னை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவல்துறை குடும்பத்தினரின் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் அங்கிருந்த கால்நடைகளுக்கு உணவு அளித்து மகிழ்ந்தார்கள்.உடன் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் , அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் தீர்வை துறை S.K.பிரபாகர் இ.ஆ.ப, காவல்துறை தலைமை இயக்குனர் J.K. திரிபாதி, இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்.