சிவந்த மண்
1969 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில்,இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான “சிவந்த மண் “திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம்.முதலில் இப்படம் “அன்று சிந்திய ரத்தம் “என்ற பெயரில் மக்கள் திலகம் எம்ஜியார் நடிப்பதாக இருந்தது. பிறகு என்ன காரணத்தினாலோ எம்ஜியார் இதில் நடிக்கவில்லை. இப்படத்தின் சில பாடல் காட்சிகளும்,மற்ற சில காட்சிகளும் ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பெரீஸில் படமாக்கப்பட்ட போது இயக்குனர் ஸ்ரீதரின் தாயார் சென்னையில் காலமானார். ஸ்ரீதருக்கும் அவர் மனைவி தேவசேனாவுக்கும் இச் செய்தி அதிர்ச்சியை கொடுக்கவே,பெரிய நடிகரின் படம் இது.பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கால்ஷீட் கிடைப்பது கடினம்,எனவே ஸ்ரீதரும் தேவசேனாவும் சென்னை செல்வதாகவும் , பாக்கி காட்சிகளை தன் தம்பி சி.வி.ராஜேந்திரனை வைத்து எடுக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிர்ச்சியுற்று,உங்களுக்கு கால்ஷீட் நான் எப்போது வேண்டுமானாலும் தருகின்றேன் நீங்கள் சென்னை சென்று உங்கள் தாயாருக்கு செய்ய வேண்டிய காரியங்களை கவனியுங்கள்,படப்பிடிப்பை நீங்கள் வந்த பின் ஆரம்பிக்கலாம் என பெருந்தன்மையுடன் கூறினார். பிறகு ஸ்ரீதர் திரும்பி வந்த பின் படப்பிடிப்பு நடத்தினர்.
இப்படம் ஹிந்தியில் “தர்த்தி”என்ற பெயரில் வெளியானது தமிழில் முத்துராமன் செய்த
ஆனந்த் கதாபாத்திரத்தை ஹிந்தியில் சிவாஜி கணேசன் செய்தார். ஸ்ரீதரின்
படங்களில் “சிவந்த மண்”ஓர் ஜனரஞ்சகமானது.இலங்கையிலும்,
இந்தியாவிலும் பெரும் வெற்றி பெற்ற படம்.
(ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை)
செய்தியாளர் விக்னேஷ்வரன்