பொங்கல் திருநாள் !!!
தமிழர் திருநாளான பொங்கல் நாளை உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சூரியனுக்கும், இயற்கைக்கும், கால்நடைக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே தை பொங்கல். முதல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கலும், மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கலும், மூன்றாம் நாள் சொந்தங்களுடன் நேரம் செலவிட காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நாளை பொங்கல் வைக்க சிறந்த நேரமாக ஆச்சார்யர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், காலை 8.09 முதல் 9 வரை அல்லது காலை 11 முதல் 12 வரை.
பொதுவாக காலை 11 முதல் 12 வரை நல்ல நேரம் என்றும் அந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதற்கும் முன்னதாகவே பொங்கல் வைத்து வழிபட விரும்புவோர் காலை 8.09 முதல் 9 மணி வரை பொங்கல் வைத்து படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.