உலகப் பாவை – தொடர் – 14

          14. உலகக் கல்வி 

ஒருவரைநன் கறியும் போதே உள்ளத்தில் உறவு பூக்கும்; பெருவுலகை அறியும் போதே பெருக்கெடுக்கும் ஒருமைப்
பாடு;

ஒருமைப்பாட் டுணர்வு தோன்றின்
ஒருவுலகம் பூத்துக் காய்க்கும்; ஒருவுலகம் பூத்துக் காய்க்க
உறுதுணைநற் கல்வி யாகும்;

உறுதுணையாய் அமையும் கல்வி
உலகையெலாம் தழுவி
நிற்கும்
ஒருமைநிலை பெற்றால்,
மாந்தர்
உள்ளமெலாம் உறவால்
துள்ளும்;

உருவாக வேண்டும் இந்த
ஓருலகக் கல்வி என்ற
கருத்ததனை முன்னே வைத்து
உலாவருவாய் உலக பாவாய்!

பேராசிரியர் முனைவர்
கு. மோகனராசு, நிறுவனர், உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.