போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள் அறிவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணையில் நேற்று வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது என்றும், விவசாயிகளுடனான பேச்சு திருப்தி அளிக்கவில்லை என்றும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க நேரிடும் என்றும் எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது .மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் என்றும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் ரஹ்மான்