பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்!

கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

சருமத்துக்கு மிகவும் நல்லது.

மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.

ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது.

மருத்துவ குணம் குறைவு.

பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.

ஒன்று அலல்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லையே என நினைக்கக் கூடாது. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள், குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் வரை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது உடலில் சார்ந்து நோய் நொடிகளை ஓட ஓட விரட்டும்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.