நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 3
நோய் எதிர்ப்பு ஆற்றல் நிறைந்த முருங்கை பற்றி மேலும் சில விவரங்கள்.
முருங்கை பூவையும் முருங்கை கீரையையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து பல வகையில் பயன்படுத்தலாம்.
வெயில் படாமல் நினைவில் உணர்த்தினால் மட்டுமே தான் அதனுடைய தன்மை மாறாமல் இருக்கும்.
உலர்த்தி பொடி செய்த முருங்கை இலை பொடி இன்றைய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது.
முருங்கை இலை தூளை சைவ அசைவ எந்த குழம்பிலும் கலந்து சமைத்தால் அதில் தனிச்சுவை சற்று தூக்கலாக இருக்கும்.
நிழலில் உலர்த்திய முருங்கைப் பூ பொடியை காலையில் கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகரிக்கும்.
கண் நோய் உள்ளவர்கள் தேன் கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.
கண்களில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
ஞாபகமறதி நோய் சிறந்த மருந்தாக முருங்கைப்பூ சித்த வைத்தியத்தில் கருதப்படுகிறது, முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மேலும்முருங்கைப்பூவை எந்த வகையில் சாப்பிட்டு வந்தாலும் கசாயம் வைத்து அருந்தி வந்தாலும் உடம்பிலிருக்கும் அசதி நீங்கும் பித்தம் குறையும் மேலும் தாம்பத்திய உறவில் நாட்டம் உண்டாகும் நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்.
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தாக்கத்தால் மனம் சுவை இழந்து போனவர்கள் அதிகம்.
இதுபோன்று முருங்கை பூவை தினமும் பயன்படுத்தி வந்தால் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது முருங்கைப்பூ.
முருங்கைப் பூ சூப், பொரியல், கூட்டு, பக்கோடா, ரசம் போன்ற ரெசிபிகளை எப்படி செய்வது என்கின்ற செய்முறை விளக்கத்தை அடுத்து பார்க்கலாம்.
எதையும் வருமுன் காப்போம்…!
நல்ல மருந்து….!
நம்ம நாட்டு மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119