தமிழர்களின் உரிமைகளை காப்போம்! லீமாரோஸ் மார்டின்.
தமிழ் மலர் மின்னிதழ் ஜன 12.
இலங்கை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர்வதற்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை கடந்த வெள்ளிக்கிழமை இரவு (08.01.2021) ரகசியமாக இடித்துத் தரைமட்டமாக்கியதன் மூலம் உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கானோர் எதிர்ப்பு அலை வீசியது..
இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில், எழுப்பப்பட்ட ” முள்ளி வாய்க்கால் நினைவுத் தூண்” கடந்த ஜனவரி 8ஆம் தேதி சிங்கள ராணுவத்தால் இடிக்கப்பட்டது அதைக்கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் , வடக்கிலும், கிழக்கிலும் நேற்று முழு கடையடைப்பும் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சாகும்வரை பட்டினிப்போர் நடத்தி வந்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில், நினைவுத்தூண் எழுப்பப்பட நேற்று மீண்டும் காலை அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஜனநாயக கட்சி மாநில இணை பொதுச் செயலாளர் திருமதி லீமாரோஸ் மார்டின் கேட்டுக்கொண்டுள்ளார்…
செய்தி கோபி சென்னை.