பாவேந்தரும் தமிழும் தொடர் 5

ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
(சர்வதேசமனிதனாகக்
கர்வமின்றி
பாவேந்தர்தான்
தன்னைக்கருதி
நடந்ததாலே
மண்ணில்சிறந்த
மனிதர்ஆனார்
அதனால்தான்உயர்ந்த
குரலைஎடுத்தே
அழைக்கின்றார்..ஆம்
பாரடாமானிடப்பரப்பை
என்றுபாராதார்
கண்ணிற்குப்பார்வை
ஈந்தே !)
(நீதிபதிமூ.புகழேந்தி
பாவேந்தர்
வீரப்பெருங்காவியம்
பக்கம்265)✳️

?ஓர்இனத்தின்
கவிதைவளத்தைச்
செழுமையாக்கும்
ஆளுமைகள்எல்லாக்
காலங்களிலும்
பிறப்பதில்லை!சிலரே
பிறந்திடுவார் .
அப்படிஓர்
தனித்தமிழின்தனித்த
ஆளுமைதான்
பாவேந்தர்பாரதிதாசன்.

புரட்சியில்தொண்டு
புரட்சிக்கவிகாவியம் மொழித்தொண்டின்
போர்ப்பரணிதான்
தமிழியக்கம்
தமிழினத்தின்
பண்பாடுட்டுத்தொண்டு
எதிர்பாராதமுத்தம்!
காதலின்தொண்டு
காதலா ?கடமையா?
இப்படிபலகவிதைகதை
நாடகங்கள்வழிதமிழின
உணர்ச்சியைத்தட்டி
எழுப்பினார் …?️
?
ஆதியில்வடமொழிக்
கலப்பில்எழுதிய
பாவேந்தர்மறைமலை
அடிகள்ஆரம்பித்த
தனித்தமிழ்ப்பற்றினால்
இளந்தமிழ்தூயதமிழாக
சிலிர்த்துசீறிப்பாய்ந்தது
தன்தேவையை
மொழியின்வழி தீர்த்துக்
கொள்கிறவன்கவிஞன்
மொழியால்காலத்தின்
தேவையைப்பூர்த்தி
செய்கிறவன்
பெருங்கவிஞன் .
வெற்றிடமாகக்கிடந்த
பகுத்தறிவுஇடத்தை
பக்குவமாய்நிரப்பியவர்
பாவேந்தர்..✳️

?தமிழகப்பெரு
வெளியில்சரித்திரத்தை
சாத்தியப்படுத்தியது
மொழியாற்றல்வழியில்
அறிவாற்றல் !அறிவாற்றல்வழிதான்
செயல்ஆற்றல் .
அறிவும்செயலும்
என்றஇரண்டும்
புரட்சிக்கவி
பாரதிதாசனை
உச்சம்தொடவைத்தது!

சித்தர்களுக்குப்பின்
கவிதைமொழியில்
தமிழ்ப்பரப்பில்
முன்புகேளாத
புதுமைக்குரலாக
பழமையைஉடைக்கும்
பகுத்தறிவுக்குரலாக
வேற்றுமொழியை
தகர்க்கும்
விடுதலைக்குரலாக
சங்கேமுழங்கென்று
பொங்குதமிழை
பூமியில்ஒலிக்க
விட்டவர்பாவேந்தர்.
?
( இயல்பினில்
தோன்றியதாகும்தமிழ் இந்நாவலத்தின்முதன் மொழியாகும்அயலவர்
கால்வைக்கும்முன்பே
தமிழ்ஐந்திலக்கணம்
கண்டதுமாகும்)
(பாரதிதாசனின்
பன்மணித்திரள்
தமிழ்வரலாறு
தலைப்பில்பக்கம்581)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றபேச்சாளர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.