சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க போராட்டம்!

ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து, 09/01/2021 காலை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட போது….

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி தொடர் முழக்கப் போராட்ட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நடத்துகிறது.

தமிழக சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது. இப்பல்கலைக் கழகத்திற்கு 2013 முதல் தமிழக அரசு ரூ 2800 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

     கடந்த நிதி நிலை அறிக்கையில், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ,கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.         அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் தற்பொழுது செயல் பட்டு வருகிறது. அரசே ஏற்ற பிறகும், அக் கல்லூரியின் கல்விக் கட்டணமும், பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமும் ஏற்கனவே இருந்த அளவிற்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவக் கல்விக்கு ரூ 5.44 லட்சம் என்றும், முதுநிலை மருத்துவக் கல்விக்கு  ரூ 9.6 லட்சம் வரையிலும், இளநிலை பல் மருத்துவப் படிப்பிற்கு ரூ 3.5 லட்சமும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 7.8 லட்சமும்  நிர்ணயிக்கப் பட்டு வசூல் செய்யப்படுகிறது. இது சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களை விட மிக அதிகமாகும்.

   அதே போல், ஈரோடு மாவட்டம் , பெருந்துறை IRT மருத்துவக் கல்லூரியையும் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்பொழுது அது, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படுகிறது. அக் கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இக் கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். 

    இது ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது. 

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க வேண்டும்.

• எனவே , இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை கல்விக் கட்டணமான ரூ 13,670 யையும் , முதுநிலை மருத்துவக் கல்விக் கட்டணமான ரூ 27,500 யும் இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.
• கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி) , அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ 11,610 யை மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

• இக் கோரிக்கைகளை வலியுறுத்தி , 10.01 2020 ஞாயிறு காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது

இப்போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன், மாநில மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி, மாநில செய்தி தொடர்பாளர் துறைமுகம் M. காஜா மைதீன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சேரலாதன், வடசென்னை மாவட்ட மகளிரணி தலைவி ராயபுரம். சோபியா ராணி மற்றும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ,இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ,ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள்,தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டுள்ளனர்.

செய்தி ஷா

தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.