2028 வரை மோடி தான் பிரதமர்!!!!

ஜோதிடர்கள் ஆய்வு செய்த பிரதமர் மோடியின் ஜாதகம்

ஜோதிடம் அறியப்பட்ட சுமார் 2000 வருடகாலத்திற்கு முன், இந்தியாவில் வாழ்ந்த ஞானிகள் ஒரு பேரரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று போதித்த அனைத்து விதிகளையும் நம் காலத்தில் முழுமையாக ஒருவரின் ஜாதகத்தில் இருக்கிறது என்றால் அது மோடியோட ஜாதகம் தான்.

மோடியோட ஜாதகம் மகாராஜ யோக ஜாதகம். இல்லையென்றால் குஜராத்தில் ஒரு சாமாண்ய குடும்பத்தில் எந்த ஒரு அரசியல் பின்புலமும் இன்றி பிறந்தவரால் இன்று இந்தியாவையே ஆளும் பிரதமர் பதவியில் இருக்கிறார் என்றால் அதற்கு உழைப்பு மட்டும் போதாது யோகமும் வேண்டும்.

லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், சரன்சிங், விபி சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், தேவகவுடா ஐ.கே. குஜ்ரால் ஏன் நேரு குடும்பத்தில் இருந்து ராஜிவ்காந்தி கூட அதிர்ஸ்டவசமாக பிரதமராக வந்துள்ளார்கள்.

ஆனால் அடுத்து அவர்களால் ஏன் பிரதமர் பதவியில் நீடிக்க முடியவில்லை. பிரதமர் பதவிக்கு அவர்களை கொண்டு வந்த அதிர்ஷ்டம் ஏன் கடைசிவரை துணை நிற்கவில்லை.

பொதுவாக ஒரு நபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிக உயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். 10 ம் இடம் பதவியைக் கொடுத்தாலும், அந்த பதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் தக்க வைக்கும் திறமையும், இருந்தால் தான் அவரால் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அந்த ஆற்றல் மோடியிடம் இருக்கிறது.

இதை அவருக்கு அளிப்பதும் அவருடைய யோக ஜாதகம் தான். நேற்று பல பத்திரிக்கை களில் இன்னும்
9 ஆண்டுகளுக்கு அதாவது 2028 ம் ஆண்டு வரை மோடியே தொடர்ந்து பிரதமராக இருப்பார் என்றும் அவரது ஜாதகத்தில் அதற்கான அமைப்புகள் உள்ளது என்றும் இப்பொழுது பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

அதாவது வருகின்ற லோக்சபா தேர்தல் மட்டுமின்றிஅடுத்து வரும் 2024 தேர்தலிலும் பிஜேபியே வெற்றி பெறும் மோடியே பிரதமராவார் என்று நிறைய ஜோதிடர்கள் கூறி மோடியோட எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கி விட்டார்கள்..

உடனே உங்களுக்கு ஜோசியர்கள் கூறி விட்டால் போதுமா? மக்கள் வாக்களிக்க வேண்டாமா? என்று கேள்வி வரலாம். இதற்கு விடை தேடி 2014 தேர்தல் களம் நோக்கி செல்வோம்.

2014 ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 2014 ஜனவரியில் நம்முடைய தமிழகத்தில் உள்ள பார்த்தசாரதி என்கிற ஜோதிடர், வரும் தேர்தலில் மோடி அமோக வெற்றிபெற்று பிரதமராவார் என்றும் அதுமட்டுமின்றி 2028 வரை மோடியே பிரதமராக இருப்பார் என்றும் கூறியுள்ளதை உங்களுக்கு இப்பொழுது நினைவு படுத்துகிறேன்.

ஆக ஜோதிடங்கள் பொய்யில்லை அது மோடி விசயத்தில் மெய்யாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மோடியின் ஜாதகத்தில் எண்ணற்ற யோகங்கள் அமைந்துள்ளனவாம் . சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம், புதஆதித்ய யோகம், நீச்ச பங்க ராஜயோகம், ருசக யோகம், கஜகேசரி யோகம் என்று ஏகப்பட்ட யோகங்கள் மோடியின் ஜாதகத்தில் வரிசை கட்டி வருகிறது.

அதனால் மோடியை
2028ம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்து அசைக்க முடியாது என்று அவருடைய ஜாதகம் கூறுகிறது.

அதனால் ராகுல்,
மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றவர்கள் பிரதமர் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு இருக்கிற வேலையை பாருங்கள் என்று நான் கூறவில்லை மோடியோட ஜாதகம் கூறுகிறது.

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஒருவருக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றன. அதிலும் ராஜயோக ஜாதகம் இருந்தால் ஒருவருக்கு அரசாளும் யோகம் தேடி வரும்.. என்பதற்கு மோடியையே உதாரணமாக கூறலாம்.

1950 ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி பகல்
11 மணிக்கு பிறந்த மோடியோட ராசி மற்றும் லக்கினம் விருச்சகம். நட்சத்திரம் அனுசம் இதை வைத்து எழுதப்பட்ட மோடியோட ஜாதகம் அவருக்கு 35 வயது வரை நாடோடி வாழ்க்கையையே தரும் என்று கூறி இருந்தது.

இதற்கு பிறகு தான் கட்சி பதவிகளின் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்தார்.

மோடி 1985க்கு பிறகு தீவிர அரசியலில் இருந்தாலும்
15 ஆண்டுகள் வரை அரசியல் மூலமாக ஒரு கவுன்சிலராக கூட மோடி இருந்தது இல்லை.
ஆனால் 2001 ல் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பூகம்பத்தினால் அப்பொழுது குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேலுக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்ப இந்த எதிர்ப்பை குறைக்கவே மோடி முதல்வராக்கப்பட்டார்.

மோடி அரசியலில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாது கட்சி பணி
ஆற்றிக்கொண்டு இருந்த வேளையில் முதல்வர் பதவி தேடி வந்துள்ளது. இது இது தான் ராஜயோகம் என்பது.

மோடியின் ஜாதகத்தில் மகாராஜா யோகம் இருந்ததால் தான் அப்பொழுது குஜராத்தில் கேசுபாய் படேலுக்கு அடுத்து பல தலைவர்கள் பிஜேபியில் இருந்தும் மோடி குஜராத் முதல்வராக வருகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ஜாதகத்தில் உள்ள மகாராஜா யோகம் தான்.

இந்த மகாராஜா யோகம் இருந்தால் ஒருத்தர் என்ன நினைத்தாலும் சாதிக்க முடியுமாம். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.

அடுத்து முதல்வராக இருந்தால் மட்டும் போதுமா? அதை தக்கவைக்க ஆற்றலும் புகழும் வேண்டும் அல்லவா. அதை அளிக்க மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம், சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் புத ஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ருசக யோகம், கஜகேசரி யோகம் என்று பல யோகங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

அதோடு மோடி ஜாதகத்தில் தற்போது சுக்கிரனும், சனியும் சேர்ந்து வலுவாக உள்ளன. சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களும் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன. இந்த 5 கிரகங்களும் சேர்ந்து நிச்சயம் அவரை மீண்டும் பிரதமர் பதவியில் உட்கார வைக்க 100 சதவிகித வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஜோதிடர்கள்.

தற்போது மோடிக்கு சந்திர திசை நடக்கிறது. 2021ம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெறும். சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது. 2021ம் ஆண்டு மோடிக்கு சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை பிறக்கும். செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கும். இந்த
7 ஆண்டுகளும் மோடியின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார்.

அவர் நினைத்தது எல்லாமே வளர்ச்சித் திட்டங்களாகி, சாதனைகளாக மாறும். இந்த 7 வருடமும் அவர் ஓய்வே இல்லாமல் உழைப்பார். இதனால் இந்தியா உலகின் வல்லரசாக உலகில் இருக்கும் என்கிறார்கள். இதை தான் மோடியும்
2029 ல் இந்தியா உலகின்
2 வது பொருளாதார நாடாக இருக்கும் என்கிறார்.

இப்பொழுதே மோடி பேச்சை கவனியுங்கள் என்னுடைய ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம்
10 ட்ரில்லியன் டாலரை
எட்டும் என்று சவாலாக கூறுகிறார். இப்பொழுது
3 ட்ரில்லியன் டாலரை கொண்டுள்ள இந்திய பொருளாதாரம் இன்னும்
10 வருடங்களில்
10 ட்ரில்லியன் டாலரை நிச்சயமாக எட்டி விடும்.

இதைத்தான் சுமார் 460 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் வாழ்ந்த நாஸ்டர் தாம் என்கிற ஜோதிடர், இந்தியா
2029 ம் ஆண்டு காலத்தில் உலக வல்லரசாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நாஸ்டர் தாமஸ் இந்தியா வல்லரசாக உருவாகும் காலத்தில் இந்தியாவில் தொன்மையான மதத்தை பின்பற்றி அரசியல் நடத்தும் ஒரு கட்சியின் சக்திவாய்ந்த தலைவரின் காலத்தில் இந்தியா வல்லரசாக உருவாகும் என்று எழுதி வைத்துள்ளார்.

எனவே மோடியின் ஜாதகம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால் இந்தியாவை யாரும் இனிஅசைக்க முடியாது. இந்தியாவை ஆளும் மோடியையும் இன்னும் பத்து வருசத்துக்கு அசைக்கவே முடியாது என்று உள்ளூரில் உள்ள ஜோதிடர் மட்டுமல்ல உலக புகழ் பெற்ற ஜோதிடர் முதற் கொண்டு கூறுவதால் இன்னும்
10 வருசத்துக்கு மோடி தான் பிரதமர்..

படித்ததில் பகிர்வது,

Astro Selvaraj Trichy
Cell : 9842457912

Leave a Reply

Your email address will not be published.