சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்

சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்!

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்திய தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில நபர்கள் தொடர்ந்து தங்கம் கடத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சில பயணிகளிடம் சோதனை நடத்திய போது, அவர்கள் 1.97 கோடி ரூபாய் மதிப்பிலான 3.72 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கடத்திய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து சாக்லேட் கவரில் 660 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து கொண்டு வந்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு, அவர் மறைத்து வைத்திருந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து 3.18 கிலோ தங்கத்தை தனது மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த 15 பயணிகளை அதிகாரிகள் கைது செய்து, கடத்திய தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.