உலகப் பாவை தொடர்-8

உலகப் பாவை

         8. பகுத்தறிவான்
             பகுத்து அறியான்

பகுத்தறிவால் உயர்வான், மாந்தர்
பகுத்திருக்க இசைவான் அல்லன் ;
வகுத்ததெலாம் விதியென் றோதும்
வரட்டுமொழி விதைப்பான் அல்லன் ;

வகுத்தஎக் கொள்கை யேனும் மாந்தரையோர் அணுவே கூடப்
பகுக்குமெனில் அந்தக் கொள்கை
பாரிலினி வேண்டாம் என்று

வகுத்திடுவான் புதிய பாதை; மனிதகுலம் ஒன்றும் கீதை;
உகுக்குமவன் கண்ணீர் கூட ஒருமைப்பாட் டொளியைக் காட்டும் ;

தகுதிமிகு அன்னார் இன்று தரணியிலே மிகுதல் வேண்டும்:
வகுநெறி! பின் அதனைக் கூறி வலம்வருவாய் உலக பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.