உலகப் பாவை
7. நன்னெஞ்சர்
சாவதில்லை
நெஞ்சில்நல் உறவு பொங்க
நீள்விழியில் கனிவு கொஞ்ச, வஞ்சமிலாச் சொற்கள் கோடி வாயருகே குழைந்து பாய,
பஞ்சிளம்செவ் அடியைத்
தூக்கிப்
பழகுநடை கற்க வைக்கும்
பிஞ்சுள்ளம் கொண்ட தன்சேய் பெயர்த்தஅடி இடறு மானால்,
அஞ்சிடலென் றுடனே தாவும் அன்னையின் கைகள் போலச் சஞ்சலங்கள் காக்க வென்றே
தம்கரங்கள் துடித்து நிற்க,
எஞ்சியபல் உறுப்பும் மக்கள் இணைப்புப்பண் பாட, வாழும் சஞ்சிவியார் சாகார் என்று சாற்றியேவா உலக பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்
