அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கும் முதல்வர் . வரும் 16-ந்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிடுவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் 16-ந்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிடுவதாக தெரிவித்தார்.
ரஹ்மான். செய்தியாளர். தமிழ் மலர் மின்னிதழ்