சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று விடியற்காலையில் இருந்து கனமழை இடைவிடாது கொட்டித்தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
