கங்குலியிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
முன்னாள் கேப்டன் கங்குலி 48. கொல்கத்தா பெகலா வீட்டில் உள்ள டிரட்மில்லில் பயிற்சியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் , லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக உட்லாண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தகுழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதில் ஒன்று 90 சதவீதம் இருந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு அடைப்பு நீக்கப்பட்டது.
தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் கங்குலி நலமாக உள்ளார். இவர் விரைவில் குணமடைய முன்னாள் வீரர் சச்சின், கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.