சீன நாட்டிலிருந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர்

அமெரிக்க பெற்றோர் சீன குழந்தை என்று எண்ணி கொரியன் குழந்தையை வளர்த்து வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் சீன நாட்டிலிருந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அத்தம்பதியினர் குழந்தை வளரும்போது தன் நாட்டு கலாச்சாரத்தையும் தாய்நாட்டையும் தவறவிட்டுவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்த குழந்தையை சீன மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்து வளர்த்து வந்துள்ளனர். மேலும் அந்த குழந்தையை அப்பகுதியில் வாழும் சீன நாட்டைச் சேர்ந்த மக்களுடன் நட்பு ஏற்படுத்தி வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அக்குழந்தை வளர்ந்து தற்போது 17 வயது சிறுவனான நிலையில் கல்லூரிக்கு அனுப்ப நினைத்துள்ளனர்.

அப்போதுதான் அந்த தம்பதியினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது அந்த சிறுவனின் பிறப்புச் சான்றிதழில் சொந்த பெற்றோரின் பெயர் பார்க் மற்றும் கிம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது அவன் சீனாவைச் சேர்ந்த சிறுவன் அல்ல கொரிய நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெற்றோர் சீன குழந்தை என்று தவறாக எண்ணி கொரியாவைச் சேர்ந்த குழந்தையை அமெரிக்காவில் சீன கலாச்சாரத்துடன் வளர்த்து விட்டதால் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.