கடன் ஏற்படும் ஜாதக அமைப்பு..
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார்.
இவ்விசயத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும்
பார்க்க வேண்டும்.
அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும்….
உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குருபகவான் 6ஆம் அதிபதி சூரியன்…
இதில் குரு நீச்சமாகி,
6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.
அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும்.., அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும்.
அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்…
Astro Selvaraj Trichy
Cell: 9842457912
நன்றி வே. இராஜவர்மன் டில்லி