உலகப் பாவை தொடர் 5
உலகப் பாவை-தொடர் 5
5. ஒன்றி வாழ்வதே
வாழ்க்கை
ஒருகையைத் தட்டின் ஓசை ஒருபோதும் எழுவ தில்லை ;
ஒருமரமே நின்று தோப்பு ஒருபோதும் ஆவ தில்லை;
ஒருபக்கம் என்று எந்த
உருப்படிக்கும் இருப்ப
தில்லை;
ஒருபொருள் ‘சேர்க்கை’ என்று ஒருபோதும் சொல்வ தில்லை;
ஒருமனிதன் தனித்து நின்று
ஒருமனிதன் பிறப்பு தில்லை;
ஒருமனிதன் தனித்து எந்த
உருப்படியும் நடப்ப தில்லை;
ஒருமித்த பயன்கள் நாடி
ஒன்றுவதே வாழ்க்கை
எல்லை;
ஒருமையிதை உலகுக் கோதி உலாவருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்