11 நாட்கள் விடுமுறை..
நியாய விலைக்கடைகளுக்கு பண்டிகைகளை முன்னிட்டு 11 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு…
தமிழக அரசால் பல்வேறு பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து பல்வேறு பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவு துறை அறிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26 ,ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 10, அக்டோபர் 2, அக்டோபர் 15, நவம்பர் 4, டிசம்பர் 25 ஆகிய 11 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக
குறிப்பிட்டுள்ளது.
இந்த நாட்களுடன் வார விடுமுறை நாட்களிலும் நியாயவிலைக் கடைகள் இயங்காது என்று தெரிவித்துள்ளது.
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்