பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்!
டெல்லி: இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவரசகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மற்ற நாடுகளைபோல் அல்லாமல் இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக 4 தடுப்பூசிகள் உருவாகி உள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. நமது நாட்டில் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வருகிறது.
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்) கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. ஆக்ஸ்போர்டு, பாரத் பயோ டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய 3 நிறுவனங்கள், தங்களது தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேற்று முன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மற்ற நாடுகளைபோல் அல்லாமல் இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக 4 தடுப்பூசிகள் உருவாகி வருகிறது. அதில் ஒன்றான சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவரசகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஏற்கனவே மூன்று தடுப்பூசி நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதால், இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்,