விவசாயிகளுடன் 6-வது கட்ட பேச்சுவார்த்தை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 35-வது நாளாக நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.

அதேநேரத்தில் விவசாயிகள் 4 நிபந்தனைகளை விதித்தனர். 3 சட்டங்களையும் வாபஸ் வாங்கியே தீர வேண்டும். விளை பொருட் கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பது சம்பந்தமாக சட்டம் கொண்டு வரவேண்டும். புதிய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும். டெல்லி மற்றும் புறநகர் சுற்றுச்சூழல் அவசர சட்டத்தில் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் அம்சங்களை நீக்க வேண்டும். இந்த வி‌ஷயங்கள் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.