பாஸ்டேக் கட்டாயம்
மத்திய அரிசின் புதிய அறிவிப்பின் கீழ் டிசம்பர் 1, 2017க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அனைத்து M மற்றும் N ரக வாகனங்களுக்கு, குறைந்தபட்சம் 4 சக்கரம் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் CMVR 1989 சட்டத்தின் கீழ் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
M ரக வாகனங்கள் என்றால் பயணிகளுக்குப் போக்குவரத்து சேவை அளிக்கும் 4 சக்கரங்கள் கொண்ட மோட்டார் வாகனங்கள், N ரக வாகனங்கள் என்றால் சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களாகும். மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் டிசம்பர் 1, 2017க்கு முன் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாகியுள்ளது.