உலகப் பாவை தொடர்-2

உலகப் பாவை பகுதி-2

   இயற்கையில் எவ்வுயிரும் ஒன்றே!  

இயற்கையோர் பெரும்பேர் ஆற்றல்!
இயக்கமெலாம் அதன்கை ஆட்டம்!
இயற்கையதை வெல்வோம் என்று
இயன்றவரை முயன்று,
உண்மை

வியக்குமள வெடுத்துச் சொல்வோர்
விளக்கமெலாம் இயற்கை தன்னின்
இயற்கைதனை அறிதல்
ஒன்றே;
இயற்கைதனை வெல்லல் அன்று;

இயற்கைதனை அறியும்
கல்வி
இயற்கையதில் அணுவே
ஆகும்;
இயற்கையதை அறிவார்,
‘மக்கள்
இயற்கையதன் படைப்பில் ஒன்றாய்

இயலுவதே இயற்கை’
என்னும்
இயற்கையதை உணர்வார்;
இந்த
உயர்மறையை உலகோர்க்
கோதி
உலா வருவாய் உலகப்
பாவாய்!

  • கு. மோகனராசு
    நிறுவனர்
    உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.