சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று வெளியீடு!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி இன்று வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் வகுப்பில் பாடம் கற்று வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனினும் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அதனை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது என்றும், பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தேர்வு நடைபெறும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.