விமானங்களுக்கு தற்காலிகமாக தடை

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் இந்தியா உட்பட சில நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர், அது காலவரையற்ற தடையாக இருக்காது றன தெரிவித்துள்ளார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமில்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.