சுற்றுலா பயணிகள் கூட்டம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுக்கு முழுவதும் திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கடந்த 8 மாதங்களுக்கு மேல் கொரோனா தொற்று காரணமாக ஆவணி மூலத்திருநாள், கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்கவும், கடலில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கடலில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தினமும் அதிகமாக பக்தர்கள் கோயிலுக்கு வருவதை காண முடிகிறது. மேலும் பாதயாத்திரை பக்தர்களும் தினசரி வருகின்றனர். இந்நிலையில் 25ம்தேதி கிறிஸ்துமஸ், சனி, ஞாயிறு விடுமுறை 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை மற்றும் சனிப்பெயர்ச்சி என்பதால் அதிகாலையிலேயே நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்தனர். கடற்கரையில் புனித நீராடிய பின்னர் பக்தர்கள் சிறப்பு மற்றும் தர்ம தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.