சென்னை :
பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு முழுவதும் சாக்கடை நீர் நிரம்பி வழிந்து நின்றதால் நேற்று பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டார்கள்.
இதனை நேற்று தமிழ்மலர் மீடியா பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் : 14, வட்டம் : 185 பாலவாக்கம் சம்பந்தப்பட்ட அதிகாரி திரு, ராஜேஷ் AE அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து
திரு, ராஜேஷ் AE சம்பந்தப்பட்ட இடத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் திரு, ராஜேஷ் AE அவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் இன்று வேம்புலி அம்மன் கோயில் அனைத்து தெருக்களிலும் சாக்கடை முழுவதும் தூர்வாரப்பட்டு சாக்கடை நீர் நிற்காதவாறு சரி செய்யப்பட்டது.
தமிழ்மலர் மீடியா கோரிக்கையை ஏற்று, மக்களின் நலன் கருதி இதற்கு உடனே நடவடிக்கை எடுத்த பாலவாக்கம் திரு, ராஜேஷ் AE அவர்களுக்கும் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் தமிழ்மலர் மின்னிதழ் மீடியா சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்
