39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

நேற்று 26.12.2020 நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமாகும். இந்திய திரைவானில் துருவநட்சத்திரமாக ஒளி வீசிய சிறந்த கலைஞர். நடிகைகளில் சிவாஜி கணேசனுக்கு ஈடாக
“நடிகையர் திலகம்” என்ற பட்டம் பெற்ற ஒரே நடிகை . சிவாஜி சாவித்திரி நடிப்பில் உருவான “பாசமலர்”படம் ஒன்றே போதும் இருவரின் சிறப்பைக்கூற. இப்படத்தில் இருவரும் நடிக்கவில்லை அண்ணன் தங்கையாக வாழ்ந்தே காட்டினர்.அனைத்து இந்திய மொழிகளிலும் நடிப்பால் தன் ஆளுமையை ஆற்றியவர்.இவரின் வாழ்க்கை வரலாறு “மகாநதி”என்ற படமாக
வெளிவந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இக்கலைஞரை அவர் மறைந்த நாளில் நினைவு கூர்வோமாக.. (sgs gampola)

Leave a Reply

Your email address will not be published.