மின் வாரியம் அறிவிப்பு!


மின் ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம்!

மின் தடை, வீட்டின் மின்சார
புதிய இணைப்பு சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உங்கள் பகுதிகளில் மின்பழுது ஏற்பட்டாலோ அல்லது சரிசெய்வதாக இருந்தாலோ அதை வந்து சரி செய்யும் மின் ஊழியர்கள் கேட்கும் பணத்தை மக்கள் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் மின் தடை, சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

உங்களிடம் பணம்
வாங்கும் மின்வாரிய ஊழியர்கள் அதிகாரிகள் பற்றி புகார் தெரிவிக்க
94458 57593 , 94458 57594 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

K.N. அப்துல் ரசாக்
செய்தியாளர், தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.