தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம், முக கவசம்,
அணிவது மற்றும் இருசக்கர வாகனத்தில் இரண்டு
பேருக்கு மேல் செல்லக்கூடாது என குறித்த விழிப்புணர்வு தமிழக அரசால் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கடைபிடித்து வருகின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம். பம்மல் சங்கர் நகர் S-6 காவல் ஆய்வாளர்
பறக்கத்துள்ளாஹ் அவர்களின் ஆலோசனையில்
துணை காவல் ஆய்வாளர் மணிவண்ணன்
தலைமையில் காவலர்கள் பம்மல் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசமும் சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது என்றும்
பொதுமக்களுக்குமுககவசமும் அணிந்து வரவேண்டும் என்று
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.