தர்ணா போராட்டம்!
நெருப்பெரிச்சல் வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி மூன்று மாதங்களாக போராட்டம் அரசு மதுபான கடை வந்த நாளிலிருந்தே தொடர் போராட்டத்தை நடத்தி வந்த வாவிபாளையம் பகுதி மக்களுக்கு அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது 90 நாட்களுக்குள் வேறு இடத்தில் கடையை இடம் மாற்றுவது அல்லது நிரந்தரமாக கடையை மூடுவது என முடிவு செய்யப்பட்டது ஆனால் 90 நாள் கடந்தும் அதே இடத்தில் அரசு மதுபானக்கடை தொடர்ந்து நடத்தப்பட்டதால் நேற்று வாவி பாளையம் பகுதியில் 16/12 2020 செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி அனைத்து வீடுகளிலும் ஏற்றப்பட்டது அதைத் தொடர்ந்து மாலை நான்கு மணியளவில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. -தமிழ்மலர் மின்னிதழ் ரிப்போர்ட்டர், புவனேஸ்வரன் திருப்பூர்.